யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2

பூத்து குலுங்கிடுவாய்

காய்த்து க‌னி த‌ருவாய்

பூமியெல்லாம் நிர‌ப்பிடுவாய் – இந்த‌

என் ம‌க‌னே (ளே) நீ வேரூன்றுவாய்

 

1.

நானே காப்பாற்றுவேன்

நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்

இர‌வும் ப‌க‌லும் காத்துக் கொள்வேன் – உன்னை

எவ‌ரும் தீங்கிழைக்க‌ விட‌மாட்டேன்     – யாக்கோபே

 

2.

அருமையான‌ ம‌க‌ன் அல்ல‌வோ

பிரிய‌மான‌ பிள்ளைய‌ல்ல‌வோ – நீ

உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்

உன‌க்காக‌ என் இத‌ய‌ம் ஏங்குகின்றது         – யாக்கோபே

 

3.

நுக‌ங்க‌ளை முறித்துவிட்டேன்

க‌ட்டுக‌ளை அறுத்துவிட்டேன்

இனிமேல் நீ அடிமை ஆவ‌தில்லை

என‌க்கே ஊழிய‌ம் செய்திடுவாய்                   – யாக்கோபே

 

4.

புதிய‌ கூர்மையான‌

போர‌டிக்கும் க‌ருவியாக்குவேன் – உன்னை

ம‌லைக‌ளை மிதித்து நொறுக்கிடுவாய்

குன்றுக‌ளை த‌விடு பொடியாக்குவாய்     – யாக்கோபே

 

5.

மேடுக‌ளை பிள‌ந்து

ஆறுக‌ள் தோன்ற‌ செய்வேன்

ப‌ள்ள‌த்தாக்கின் ந‌டுவினிலே

ஊற்றுக‌ள் புற‌ப்ப‌ட்டு ஓட‌ச் செய்வேன்       – யாக்கோபே

 

 

6.

நானே உங்க‌ள் தேவ‌ன்

நீங்க‌ள் என் பிள்ளைகள்

பாழான‌ ம‌ண்மேடு க‌ட்ட‌ப்ப‌டும்

பாட‌லும் ஆட‌லும் மீண்டும் கேட்கும்     – யாக்கோபே

 

7.

உன்னோடு நான் இருந்து

உன‌க்காக‌ வழக்காடுவேன்

அச்சுறுத்துவோர் எவ‌ருமின்றி

அமைதியிலே நீ இளைப்பாறுவாய்     – யாக்கோபே

 

 



yakkobe ni verunruvay – 2

buththu kulungkiduvay

kayththu ka‌ni dha‌ruvay

bumiyellam nira‌bbiduvay – inthdha‌

en ma‌ka‌ne (le) ni verunruvay

 

1.

nane kabbarruven

nalthorum nir bayssuven

ira‌vum pa‌ka‌lum kaththuk kolven – unnai

eva‌rum thingkizaikka‌ vita‌madden     – yakkobe

 

2.

arumaiyana‌ ma‌ka‌n alla‌vo

biriya‌mana‌ billaiya‌lla‌vo – ni

unnai nan innum ninaikkinren

una‌kkaka‌ en idha‌ya‌m eengkukinrathu         – yakkobe

 

3.

nuka‌ngka‌lai muriththuvidden

ka‌dduka‌lai aruththuvidden

inimel ni adimai aava‌thillai

ena‌kke uuziya‌m seythiduvay                   – yakkobe

 

4.

buthiya‌ kurmaiyana‌

bora‌dikkum ka‌ruviyakkuven – unnai

ma‌laika‌lai mithiththu norukkiduvay

kunruka‌lai dha‌vidu bodiyakkuvay     – yakkobe

 

5.

meduka‌lai bila‌nththu

aaruka‌l thonra‌ seyven

pa‌lla‌ththakkin na‌duvinile

uurruka‌l bura‌bpa‌ddu oota‌s seyven       – yakkobe

 

 

6.

nane ungka‌l theva‌n

ningka‌l en billaikal

bazana‌ ma‌nmedu ka‌dta‌bpa‌dum

bata‌lum aata‌lum mindum kedkum     – yakkobe

 

7.

unnodu nan irunththu

una‌kkaka‌ vazhakkaduven

assuruththuvor eva‌ruminri

amaithiyile ni ilaibbaruvay     – yakkobe